சபரிமலையில் எதற்காக 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது என்று கேரள அரசுக்கு அம்மாநில உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.
கேரளாவில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குள் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கும் நிலையில், கோயிலுக்குள் பெண் பக்தர்கள் நுழைய முயலும் போது, அதை எதிர்த்து போராட்டங்கள் நடத்தப்பட்டதால், சபரிமலை கோயில் வளாகத்துக்குள் காவல்துறையினர் 144 தடை உத்தரவு பிறப்பித்தனர்.
இந்நிலையில், சபரிமலை ஐயப்பன் கோயில் விவகாரம் தொடர்பான வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், கோயில் வளாகத்துக்குள் 144 தடை உத்தரவு பிறப்பிக்க வேண்டியதன் அவசியம் குறித்து நீதிமன்றத்தில் அறிக்கை தாக்கல் செய்ய அம்மாநில அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
Discussion about this post