கோவையில் ரயில்கள் மூலம் கடத்திச் செல்லப்பட்ட 280 குழந்தைகள் மீட்கப்பட்டு குழந்தைகள் நல மையம் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக ஈரோட்டில் ரயில்வே Child Help Line அமைப்பு தெரிவித்துள்ளது.
குழந்தைகள் தினவிழா மற்றும் ரயில்வே Child Help Line நண்பர்கள் வாரத்தையொட்டி, கோவை முதல் ஈரோடு வரை ரயில் பயணமாக வந்த ரயில்வே Child Help Line அமைப்பினர், வழி முழுவதும் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டனர்.
குழந்தைகளை பாதுகாப்பது குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டிய அவர்கள், துண்டு பிரசுரங்களையும் விநியோகம் செய்தனர். இதுதொடர்பான குற்றங்களை தடுக்க ரயில் பயணிகள் ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டனர்.
கடந்த ஏப்ரல் முதல் நவம்பர் வரையில் கோவை ரயில் நிலையத்தில், கடத்தப்பட்ட 280 குழந்தைகள் மீட்கப்பட்டு, குழந்தைகள் நல வாரியம் மூலமாக பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் அவர்கள் கூறினர்.
Discussion about this post