தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர ராவ் கமிஷன் வாங்காமல் எந்த வேலையையும் செய்வதில்லை என காங்கிரஸ் தேசிய செய்தித் தொடர்பாளர் குஷ்பு குற்றம்சாட்டியுள்ளார்.
தெலுங்கானாவில் தேர்தல் பிரச்சாரம் சூடுபிடிக்க தொடங்கியுள்ளது. அம்மாநிலத்திற்கு டிசம்பர் 7-ம் தேதி பொதுத் தேர்தல் நடைபெற உள்ளது. பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக செய்தியாளர்களிடம் பேசிய குஷ்பு, தெலுங்கானா அரசையும், முதலமைச்சர் சந்திரசேகர ராவையும் கடுமையாக விமர்சித்தார். அவரது ஆட்சியில் தெலுங்கானா மாநிலம் ஊழலில் இரண்டாவது இடத்தில் இருப்பதாகவும், வேலை வாய்ப்பின்மையில் மூன்றாவது இடத்தில் இருப்பதாகவும் விமர்சித்தார்.
புதிய மன்னர் போன்று செயல்படும் சந்திரசேகர ராவ் கமிஷன் வாங்காமல் எந்த அரசு பணியையும் முடிப்பதில்லை என்று குற்றம்சாட்டினார். அவர் ஆட்சியில் பலனடைந்த ஒரே பெண் அவரது மகள் கவிதா தான் என்றும் கூறியுள்ளார்.
Discussion about this post