சத்தீஸ்கர் சட்டப் பேரவைத் தேர்தலுக்கான 2-வது கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெறவுள்ளது.
90 தொகுதிகளை கொண்ட சத்தீஸ்கர் மாநிலத்தில், இரு கட்டங்களாக தேர்தல் நடத்த முடிவு செய்யப்பட்டது. அதன்படி, நக்ஸல் ஆதிக்கம் மிகுந்த 18 தொகுதிகளில் கடந்த 12-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.28 சதவீத வாக்குகள் பதிவாகின.இந்நிலையில், இரண்டாவது மற்றும் இறுதிக்கட்டமாக 72 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
2-ம் கட்ட தேர்தலுக்காக மொத்தம் 19,296 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவு காலை 8 மணிக்கு தொடங்கி 5 மணி வரை நடைபெற உள்ளது. வாக்குப்பதிவையொட்டி மத்திய படையினர், காவல்துறையினர் என சுமார் 1 லட்சம் வீரர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Discussion about this post