பத்திரிகையாளர் கசோக்கி படுகொலையை பதிவு செய்த ஆடியோவை கேட்க விரும்பவில்லை என, அமெரிக்கா அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.
சவுதி அரேபியாவை சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கசோக்கி கொலை சம்பவம் அடங்கிய ஆடியோ டேப்பை துருக்கி அரசு கைப்பற்றியது. இதனை பிரான்ஸ், இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளுக்கு அளித்திருப்பதாக துருக்கி அதிபர் எர்டோகன் கூறியிருந்தார். இந்த ஆடியோவை கேட்டீர்களா என அமெரிக்க அதிபர் டிரம்பிடம், செய்தி நிறுவனம் ஒன்று கேள்வி எழுப்பியிருந்தது.
அதற்கு பதிலளித்த டிரம்ப், அந்த டேப்பை நான் கேட்க விரும்பவில்லை என்றும் ஏனெனில் அது ஒரு துயரமான டேப் எனவும் கூறினார். இந்த கொலையில் தனக்கு எந்த தொடர்பும் இல்லை என சவுதி இளவரசர் முகமது பின் சாலமன், தன்னிடம் கூறியதாக தெரிவித்த டிரம்ப், இதையே பலரும் குறிப்பிடுவதாகவும் கூறினார்.
Discussion about this post