ராகுல் காந்தி, மோடி போபியாவை உருவாக்கியிருப்பதாக பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா விமர்சித்துள்ளார்.
மத்திய பிரதேசம் மாநிலம் நர்சிங்பூரில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார கூட்டத்தில் பேசிய அவர், ராகுல் காந்தி தன்னுடைய பேச்சுகளில் மோடி, மோடி என உச்சரிப்பதாக சுட்டிக் காட்டினார்.
பிரதமர் மோடியை மட்டுமே அகற்ற வேண்டும் என ராகுல் காந்தி துடிப்பதாகவும், அதேசமயம் நாட்டிலிருந்து வேலைவாய்ப்பின்மை மற்றும் கல்வி அறிவின்மையை அகற்ற பா.ஜ.க விரும்புவதாகவும் அமித்ஷா கூறினார்.
மேலும் 4 தலைமுறைகளாக ஆட்சியிலிருந்த காங்கிரஸ் என்ன செய்தது என பதில் கூறியே ஆக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.
Discussion about this post