உலக பாரம்பரிய தினத்தையொட்டி விழுப்புரம் மாவட்டம் செஞ்சி கோட்டையில் சுற்றுலா பயணிகளுக்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
விழுப்புரம் மாவட்டத்தின் செஞ்சி கோட்டை மத்திய தொல்லியல் துறை பராமரிப்பில் உள்ளது. ராஜா கோட்டை, ராணிக் கோட்டை என்ற இரண்டு கோட்டைகளைக் காண தினமும் சுமார் 500க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் வந்து செல்கின்றனர்.
இந்தியா மட்டுமின்றி வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் வந்துசெல்லும் இந்த சுற்றுலா தளத்தை காண நபர் ஒன்றுக்கு 25 ரூபாய் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்நிலையில் இன்று உலக பாரம்பரிய தினத்தையொட்டி செஞ்சி கோட்டைக்கு சுற்றுலா வருபவர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்பட்டது.
இதையடுத்து செஞ்சி கோட்டையை காண இன்று காலை முதலே சுற்றுலா பயணிகள் அதிகளவில் குவிந்தனர்.
Discussion about this post