பிக் பாஸ் புகழ் சுஜா வருணி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரன் சிவகுமாரை சென்னையில் இன்று திருமணம் செய்துகொண்டார்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என நான்கு மொழி திரைப்படங்களில் நடித்திருந்தாலும், சுஜா வருணி என்ற நடிகையை பிரபலப்படுத்தியது, பிக் பாஸ் நிகழ்ச்சிதான். இந்த நிகழ்ச்சி மூலம் பிரபலமடைந்த சுஜா வருணி, நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் பேரனும், ராம்குமாரின் மகனுமான சிவகுமாரை நீண்ட நாள் காதலித்து வந்துள்ளார். இவர்களது திருமணம் சென்னையில் உள்ள தனியார் ஹோட்டல் ஒன்றில் இன்று நடைபெற்றது. இதில், இயக்குனர்கள் எஸ்.பி. முத்துராமன், விஷ்ணுவர்தன், நடிகைகள் ஸ்ரீப்ரியா, ராதிகா சரத்குமார், சுஹாசினி மணிரத்னம், லிஸி, கவிஞர் சினேகன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
Discussion about this post