ஆஸ்திரேலியா, வியட்நாம் நாடுகளில் 6 நாள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்துக்கு, டாநாங் விமான நிலையத்தில் சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது.
குடியரசு தலைவர் ராம்நாத் கோவிந்த் வியட்நாம் மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளில் ஆறு நாட்கள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டுளார். அவருடன் மத்திய அரசின் உயரதிகாரிகள் குழுவும் சென்றுள்ளது.
இந்நிலையில், வியட்நாம் நாட்டில் உள்ள கடலோர நகரமான டாநாங் நகரில் அவரது விமானம் தரையிறங்கியது. அங்கு அவருக்கு சிவப்பு கம்பளம் விரித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த சந்திப்பின் போது, அந்நாட்டின் ஜனாதிபதி, பிரதமர் மற்றும் பல்வேறு தலைவர்களை சந்தித்து இருநாடுகளுக்கிடையிலான நல்லுறவுகளை பலப்படுத்துவது தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
Discussion about this post