ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஏழுபேரின் விடுதலையை தமிழக ஆளுநர் பன்வாரிலால் ஏற்க வேண்டும் என்று, அமெரிக்காவின் நார்விச் நகர மேயர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
ராஜீவ்காந்தி கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பேரரிவாளன் உள்ளிட்ட 7 பேரை விடுதலை செய்ய தமிழக அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. இதனை ஏற்று அவர்களை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, நார்விச் நகர மேயர், பீட்டர் ஆல்பர்ட் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திற்கு கடிதம் எழுதியுள்ளார்.
28 ஆண்டுகளாக சிறைத் தண்டனை அனுபவித்த அவர்களை மனிதாபிமான அடிப்படையில் விடுதலை செய்ய வேண்டும் என்று அந்தக் கடிதத்தில் அவர் கேட்டுக் கொண்டுள்ளார். இது தனது விருப்பம் மட்டும் கிடையாது என்று குறிப்பிட்டுள்ள அவர், மனித உரிமைகளுக்காக போராடும் அனைவரின் எண்ணமும் இதுதான் என்று தெரிவித்துள்ளார்.
Discussion about this post