நகராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் மக்க வைத்து உரமாக மாற்றி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படும் என்று, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா தெரிவித்துள்ளார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், நகராட்சிக்கு உட்பட்ட 51 வார்டுகளில் நாள் ஒன்றுக்கு பல ஆயிரம் டன் குப்பைகள் சேகரிக்கப்படுவதாக தெரிவித்தார்.
இந்த குப்பைகளை சேகரித்து, பின்னர் உரமாக மாற்றி விவசாயிகளுக்கு இலவசமாக வழங்க நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். நத்தபேட்டை பகுதியில் 15 ஏக்கர் பரப்பளவில் தேங்கி கிடக்கும் குப்பைகள் விரைவில், BIO MINING என்ற முறையில் சுத்திகரிக்கப்பட்டு அகற்றப்படும் எனவும் ஆட்சியர் பொன்னையா கூறினார்.
Discussion about this post