கர்நாடக முன்னாள் அமைச்சர் ஜனார்த்தன ரெட்டியின் ஜாமின் மனு பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
ஜனார்த்தன ரெட்டி அமைச்சராக இருந்த போது நிதி நிறுவனம் ஒன்றின் உரிமையாளராக இருந்தவர் அகமத் ஃபரீத். இவர் பொதுமக்கள் பலரிடம் பணம் பெற்று திருப்பித் தராமல் மோசடி செய்தார். இவரைக் காப்பாற்ற ஜனார்த்தன ரெட்டி 18 கோடி ரூபாய் லஞ்சம் கேட்டதாக புகார் கூறப்பட்டது.
அமலாக்கத்துறையில் பதிவான இந்த வழக்கை சுமுகமாக முடித்து கொடுக்க 18 கோடி ரூபாய் பேரம் பேசி அதில் 57 கிலோ தங்க கட்டிகள் வாங்கிய விவகாரத்தில், ஜனார்த்தன ரெட்டி, சரண் அடைந்தார். பின்னர் கைது செய்யப்பட்ட அவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தநிலையில், தனக்கு ஜாமின் வழங்கக்கோரி, ஜனார்த்தன ரெட்டி தாக்கல் செய்துள்ள மனு, பெங்களூரு நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.
Discussion about this post