மோட்டார் வாகன சட்டத்தில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளதற்கு, லாரி உரிமையாளர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.
மத்திய நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம், மோட்டார் வாகனச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்துள்ளது. அதன்படி, 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை எப்.சி வாங்கினால் போதும் என்றும், நேஷ்னல் பெர்மிட் வாகனங்களுக்கு அடர்ந்த பிரவுன் நிறம் பயன்படுத்த தேவையில்லை என்றும் திருத்தம் செய்யப்பட்டுள்ளது.
இதேபோன்று லாரிகளுக்கு இரண்டு ஓட்டுநர்கள் இருக்க வேண்டிய அவசியமில்லை என்றும், ஓட்டுநர் உரிமம், வண்டி ஆவணங்கள் உள்ளிட்டவற்றை டிஜிட்டலாக வைத்திருக்கலாம் எனவும் மோட்டார் வாகன சட்டத்தில் திருத்தம் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாற்றங்களை லாரி உரிமையாளர்கள் வரவேற்றுள்ளனர்.
Discussion about this post