ஜாமினில் வெளியே இருப்பவர்கள் தன்னுடைய நேர்மை குறித்து சான்று அளிக்க வேண்டாம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் மற்றும் சோனியா குறித்து பிரதமர் மோடி விமர்சனம் செய்துள்ளார்.
சத்தீஸ்கரில் 20-ம் தேதி நடைபெற உள்ள இரண்டாம் கட்ட தேர்தலுக்கான பிரசாரத்தில் பிரதமர் மோடி நேற்று ஈடுபட்டார். பிலாஸ்பூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், டெக்கான் ஹெரால்ட் பத்திரிகை வழக்கில் ஜாமின் பெற்றிருக்கும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் சோனியாவின் பெயரை குறிப்பிடாமல், ஜாமினில் வெளியே இருக்கும் தாய் மகனிடம் இருந்து என்னுடைய நேர்மைக்கு சான்றிதழ் தேவையில்லை என்று பேசினார்.
முன்னதாக பணமதிப்பிழப்பு இரண்டாம் ஆண்டு நினைவு தின கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, மோடி பொது மக்களுக்கு பதிலாக கோட் சூட் போட்டவர்களுக்கு ஆதரவாக இருக்கிறார் என்று விமர்சித்திருந்திருந்தார். அதற்கு பதிலடியாகவே மோடி இவ்வாறு பேசியுள்ளார்.
Discussion about this post