இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்க தரப்பில், அந்நாட்டு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இலங்கை பிரதமராக இருந்த ரணில் விக்ரமசிங்கேவை, அப்பதவியில் இருந்து நீக்கி அதிபர் சிறிசேன உத்தரவிட்டார். மேலும், முன்னாள் அதிபர் ராஜபக்சவை இலங்கை பிரதமராக அறிவித்தார்.
இதற்கு கடும் எதிர்ப்பு எழுந்த நிலையிலும், ராஜபக்ச அதிபராக பதவியேற்றுக் கொண்டார். இதனிடையே பெரும்பான்மை நிரூபிக்க வேண்டிய சூழலில், ராஜபக்சவுக்கு ஆதரவு இல்லாத காரணத்தால், இலங்கை நாடாளுமன்றத்தை கலைப்பதாக சிறிசேன அறிவித்தார். இந்நிலையில், இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதற்கு எதிராக ரணில் விக்ரமசிங்க தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, சிறிசேனாவின் முடிவுக்கு எதிராக இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் உள்ளிட்ட 10 அமைப்புகள் சார்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
Discussion about this post