மத்திய அமைச்சர் அனந்தகுமார் காலமானதைத் தொடர்ந்து நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடருக்கான தேதி அறிவிப்பு தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
மத்திய அமைச்சர் அனந்த குமார் உடல்நலக் குறைவால் அதிகாலை 2 மணிக்கு பெங்களூருவில் காலமானார்.கர்நாடக மாநிலத்திலிருந்து மக்களவை உறுப்பினராக தேர்வான அவர், பா.ஜ.க.வின் மூத்தத் தலைவர்களில் ஒருவர். இதனால், மத்திய அமைச்சரவையில் இடம்பெற்ற அனந்த குமாருக்கு, உரம் மற்றும் ரசாயனத் துறை அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்டிருந்தது. தற்போது, நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக அவர் பொறுப்பு வகித்து வந்தார்.
இந்நிலையில், புற்றுநோயால் பாதிக்கப்பட்ட அவர், அமெரிக்காவில் சிகிச்சை எடுத்து வந்தார். இதைத்தொடர்ந்து, பெங்களூருவில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் இன்று அதிகாலை 2 மணியளவில் அவர் காலமானார். அவருக்கு வயது 59. அனந்த குமாரின் மறைவு பா.ஜ.க.வினரை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரை ஆளும் கட்சியும், எதிர்க்கட்சிகளும் எதிர்நோக்கி காத்திருந்தன. இது தொடர்பாக முடிவெடுக்க இன்று டெல்லியில் கூட்டம் நடைபெறுவதாக இருந்தது. இந்தநிலையில், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சர் அனந்த குமார் மறைவை தொடர்ந்து, இந்தக் கூட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது.
Discussion about this post