சத்தீஸ்கரில் முதற்கட்ட தேர்தல் நடைபெறும் தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மாவோயிஸ்டுகள் அச்சுறுத்தலால் பாதுகாப்பு பணியில் ஒரு லட்சம் பேர் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
90 உறுப்பினர்களை கொண்ட சத்தீஷ்கர் சட்டசபையின் பதவிக்காலம் நிறைவடைவதால், அங்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. அதன்படி, முதற்கட்டமாக 18 தொகுதிகளில் இன்று வாக்குப்பதிவு நடைபெறுகிறது.
தேர்தலை புறக்கணிக்குமாறு மிரட்டல் விடுத்து வரும் மாவோயிஸ்டுகள் நேற்று ஏழு இடங்களில் தாக்குதல் நடத்தினர்.
இந்தநிலையில், உச்சக்கட்ட பாதுகாப்புடன் வாக்குப்பதிவு தொடங்கி உள்ளது. மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் நிறைந்த 10 தொகுதிகளில் 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 3 மணிக்கு நிறைவடைகிறது. மொத்தம் 29 லட்சம் பேர் தங்கள் ஜனநாயக கடமையை செலுத்த உள்ளனர்.
பாதுகாப்பு பணியில் துணை ராணுவ வீரர்கள் 65 ஆயிரம் பேரும், மாநில போலீசார் 35 ஆயிரம் பேரும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முதலமைச்சர் ராமன் சிங் 143 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். மீதமுள்ள 72 தொகுதிகளில் 20-ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. வாக்கு எண்ணிக்கை அடுத்த மாதம் 11-ம் தேதி நடைபெற்று அன்று மாலைக்குள் முடிவுகள் வெளியாகும்.
Discussion about this post