பாதுகாப்பான பயனத்தை உறுதி செய்யும் விதமாக ஜப்பானில் 3D திரை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. டோக்கியோவை தலைமையிடமாக கொண்டு கியோசெரா நிறுவனம் இயங்கி வருகிறது.
எலக்ட்ரோனிக் செராமிக் உற்பத்தியை மேற்கொண்டு வரும் இந்த நிறுவனம் நான்கு மற்றும் இருசக்கர உற்பத்தி துறையில் புதிய முப்பரிமான தொழில் நுட்பத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.
விபத்துக்களை தவிர்க்கும் விதமாக 3D திரை திட்டத்தை இந்த நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் வாகனம் ஓட்டிச் செல்லும் நபருக்கு, தூரத்தில் வரும் வாகனம் மற்றும் மனிதர்களின் நடமாட்டம் காட்சிப்பூர்வமாக முன்கூட்டியே தெரியும் விதத்தில் இது உருவாக்கப்பட்டுள்ளது. இந்த திரை திட்டம், வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
Discussion about this post