தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டியில் அமமுக சார்பில் நடைபெற்ற உண்ணாவிரதத்தில் பங்கேற்றவர்கள், பசிதாங்க முடியாமல் தேநீர் கடைக்கும், பேக்கரிக்கும் படையெடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
ஆண்டிப்பட்டி வைகை அணை செல்லும் சாலையில் அமமுக சார்பில் உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. அரசுக்கு எதிராக நடைபெற்ற இந்த உண்ணாவிரதத்தில் சிலர் தான் கலந்து கொண்டனர். உண்ணாவிரதம் நடைபெற்றுக் கொண்டிருந்த போதே, பலர் பசிதாங்க முடியாமல் தேநீர் கடை மற்றும் பேக்கரிகளை நோக்கி முன்னேறினர். அங்கு வடை, பப்ஸ், தேநீர் வாங்கி அவர்கள் பசியைப் போக்கினர்.
இன்னும் பலர் மதுக்கடையில் தஞ்சம் புகுந்தனர். இதனால் கண் துடைப்புக்காகவே உண்ணாவிரதம் நடத்தியதாக பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
Discussion about this post