வீட்டு சமையல் எரிவாயு விலை ஒரே மாதத்தில் இரண்டாவது முறையாக உயர்த்தப்பட்டுள்ளது.
மத்திய பெட்ரோலியத்துறை அமைச்சகம் சமையல் எரிவாயு விநியோகஸ்தர்கள் கமிஷன் தொகையை ஒரு சிலிண்டருக்கு 48 ரூபாய் 49 பைசாவிலிருந்து, 50 ரூபாய் 58 பைசாவாக உயர்த்தியுள்ளது. இதன் காரணமாக மானியம் இல்லாத வீட்டு சமையல் எரிவாயு சிலிண்டர் விலை ஒரு ரூபாய் 69 பைசா அதிகரித்து 960 ரூபாய் 19 பைசாவாக உள்ளது.
மானியத்துடன் கூடிய சமையல் எரிவாயு விலை ஒரு ரூபாய் 69 பைசா அதிகரித்து 496 ரூபாய் எட்டு பைசாவாக உள்ளது. எனவே வாடிக்கையாளர்களின் வங்கி கணக்கில் 464 ரூபாய் மானியமாக செலுத்தப்படும். 5 கிலோ சமையல் எரிவாயு விலை 1 ரூபாய் 9 பைசா அதிகரித்துள்ளது.
Discussion about this post