வெளிநாட்டில் இருந்து கொண்டு செயல்படும் தமிழ் ராக்கர்ஸ் குழுவால், தமிழ் திரையுலகினர் கலக்கத்தில் உள்ளனர். தியேட்டர்களில் அதி நவீன தொழில்நுட்ப காட்சிகள் வெளியிடப்பட்டாலும், அதிக கட்டணம் உள்ளிட்ட காரணங்களால், தமிழ் ராக்கர்ஸ் போன்ற இணையதளங்களில் பார்ப்பதையே ரசிகர்கள் விரும்புகின்றனர். தியேட்டர் டிக்கெட் கட்டணம், வாகன கட்டணம், உணவு பண்டங்களின் விலை உள்ளிட்டவற்றை குறைக்க வேண்டும் என ரசிகர்கள் தரப்பில் தொடர்ந்து கோரிக்கைகள் எழுப்பப்பட்டு வருகின்றன. இவ்வாறு செய்தாலே, இணையதளங்களில் படம் பார்ப்பதை நிறுத்திவிட்டு, தியேட்டர்களுக்கு வருபவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கும். இதனிடையே சர்கார் படத்தை வெளியிட்ட தமிழ் ராக்கர்ஸ், 2.0 படத்தையும் வெளியிட உள்ளதாக டுவிட் செய்துள்ளது. இதனை நடிகர் ரஜினிகாந்திற்கும் டேக் செய்துள்ளனர். இதனால் இந்த விவகாரம் ரஜினியின் கவனத்திற்கு சென்றுள்ளதாகவும் அவர் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் கூறப்படுகிறது.
Discussion about this post