எதிலும் முத்திரை பதிக்க நினைக்கும் நடிகர் விஜய், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத் திட்டங்களை எரிக்கும் காட்சியில் நடித்தது மன்னிக்க முடியாதது என அமைச்சர் செல்லூர் ராஜூ குற்றம்சாட்டி உள்ளார்.
விஜய் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கத்தில் தீபாவளிக்கு திரைக்கு வந்த சர்கார் திரைப்படத்தில், முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் இலவசத் திட்டங்களை எரிக்கும் விதமாக காட்சி அமைக்கப்பட்டுள்ளது. இதற்கு அதிமுகவினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்தநிலையில், மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செல்லூர் ராஜூ, முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நலத் திட்டங்களை எரிக்கும் காட்சியில் விஜய் நடித்தது மன்னிக்க முடியாத குற்றம் என்றார்.
Discussion about this post