திமுக ஆட்சியைவிட கூடுதலாக 2 ஆயிரத்து 400 எம்.எல்.டி குடிநீர் விநியோகிக்கப்பட்டு வருவதாக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார். கோவையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மழை பொய்த்த போதிலும் சென்னையில் தினந்தோறும் லாரிகள் 9 ஆயிரத்து 100 டிரிப் மூலம் குடிநீர் விநியோகம் செய்யப்படுவதாக கூறினார்.
மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகளுடன் ஊராட்சிகளிலும் இந்தமுறை லாரிகள் மூலம் குடிநீர் வழங்கப்பட்டு வருவதாக கூறிய அவர், கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் தண்ணீருக்காக 15 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் தமிழகம் முழுவதும் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டிருப்பதாக தெரிவித்தார்.
Discussion about this post