கடந்த அக்டோபர் மாதம் ஜியோ நிறுவனம் 91 லட்சம் வாடிக்கையாளர்களை பெற்றதாக டிராய் வெளியிட்ட அறிக்கையில் தெரிய வந்துள்ளது.
இந்திய தொலைத்தொடர்பு சந்தையில் கடந்த அக்டோபர் மாதம் பல்வேறு மாற்றங்கள் செய்யப்பட்டன. இதனால் தொலைத்தொடர்பு நிறுவனங்களின் கட்டண சலுகைகள் மாற்றப்பட்டன. அதனை தொடர்ந்து கடந்த மாதம் அனைத்து நெட்வொர்க்குகளின் கட்டணங்களும் உயர்ந்தன. இதனால் அந்தந்த நிறுவனங்களின் பயனாளர்கள் கடும் சிரமத்திற்குள்ளாயினர்.
இந்நிலையில் இந்திய தொலை தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (டிராய்) சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில், 2019 அக்டோபர் மாத நிலவரப்படி , இந்தியாவில் செல்போன் மற்றும் லேண்டுலைன் இணைப்புகளின் எண்ணிக்கை 120.48 கோடியாக உயர்ந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடும்போது 0.80% வளர்ச்சியாகும். மேலும் அக்டோபர் மாதத்தில் நகர்ப்புறங்களில் செல்போன் இணைப்புகள் 68.16 கோடியாகவும், கிராமங்களில் 52.31 கோடியாகவும் உயர்ந்து இருக்கிறது.
தொலைத்தொடர்பு நிறுவனங்களை பார்த்தால் ஜியோ நிறுவனம் கிட்டத்தட்ட 90 லட்சம் இணைப்புகளை பெற்று முதலிடத்தில் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தற்சமயம் 36.43 கோடி பேர் ஜியோ நிறுவனத்துடன் இணைந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post