கன்னியாகுமரி மாவட்டத்தில் மக்களவை தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே தெரிவித்துள்ளார்.
மக்களவை தேர்தலில் அனைவரும் வாக்களிக்க வேண்டும், என்பதை வலியுறுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் நடைபெற்றது. இதனை தொடங்கி வைத்த மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் வடநேரே, பேருந்து நிலையத்தில் உள்ள அரசு பேருந்துகள் மற்றும் வாடகை கார்கள் உள்ளிட்ட வாகனங்களில், விழிப்புணர்வு ஸ்டிக்கர்களை ஓட்டினார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், மாவட்டத்தில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் 90 சதவீதம் முடிவடைந்துள்ள நிலையில், மாவட்டத்தில் விதிமீறல்களை கண்டறிய 18 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது என கூறினார். பொது இடங்களில் உள்ள கட்சி கொடிகம்பங்கள் அகற்றப்பட்டதாக தெரிவித்த அவர், விதிமீறல்கள் கண்டறியப்பட்டால் உடனடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்.
Discussion about this post