ஓசூர் அருகே கடந்த 2 நாட்களில் கேட்பாரற்று கிடந்த 9 நாட்டுத்துப்பாக்கிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளன
கிருஷ்ணகிரி மாவட்டம் குந்துக்கோட்டை அருகே நாட்டுத்துப்பாக்கிகளை ஒப்படைக்கக் கோரி , காவல்துறையினர் தண்டோரா மூலம் அறிவிப்பு செய்திருந்தனர். இந்நிலையில் காவல்துறையில் ஒப்படைக்க பயந்து சிலர் அருகில் இருந்த பாறைகள் மீதும், ஏரிகளிலும் 9 நாட்டுத்துப்பாக்கிகளை வீசி சென்றுள்ளனர். இதனிடையே அவற்றை கைப்பற்றிய காவல்துறையினர் இதுகுறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இது தொடர்பாக, ஏணிபன்டா என்னும் கிராமத்தில் சட்ட விரோதமாக நாட்டுத்துப்பாக்கிகள் தயாரித்து விற்பனை செய்து வந்த லட்சுமணன் என்பவரையும் போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Discussion about this post