சென்னை எண்ணூரில் 9 மீனவ கிராமங்களை சேர்ந்த ஆயிரக்கணக்கான மீனவர்கள் ஒன்றிணைந்து மயான கொல்லையை சிறப்பாக கொண்டாடினர்.
மாசி மாதத்தில் வரும் அமாவாசை தினத்தன்று ஆண்டுதோறும் பல்வேறு பகுதிகளில் மயானக் கொல்லை விழா நடைபெறுவது வழக்கம். இந்த விழாவில் அங்காள பரமேஸ்வரி அம்மன், மயானத்திற்கு சென்று அசுரனை கொல்வதாக ஐதீகம்.
அதன்படி, சென்னை எண்ணூரில் உள்ள சிவன்படை வீதி, பெரிய குப்பம், சின்ன குப்பம், தாழங்குப்பம் உள்ளிட்ட 9 மீனவ கிராமங்களை சேர்ந்த மீனவ மக்கள், மயானத்தில் ஒன்று கூடி, மண்ணால் அசுரன் உருவத்தை வடிவமைத்தனர். இதையடுத்து அம்மன் வேடமிட்டவர், அந்த அசுரனை வதம் செய்தார். தாரை தப்பட்டைகள் ஒலிக்க அம்மன் வேடமிட்டவர், ஐந்து கிலோ மீட்டர் தூரம் ஆவேசமாக சென்று அசுரனை வதம் செய்தது, பக்தர்களை மெய்சிலிர்க்க செய்தது.
Discussion about this post