புதிய கருவிகள் மூலம் ரத்த வங்கிகளை மேம்படுத்த தமிழக சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது
தமிழகம் முழுவதும் உள்ள 89 அரசு ரத்த வங்கிகளில் சேமித்து வைக்கப்படும் ரத்தம் வீணாகாமல் தடுக்க அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகிறது. இந்தாண்டு, 89 அரசு ரத்த வங்கிகளை மேம்படுத்தவும் கணினி பராமரிப்புக்கும் 89 லட்சம் ரூபாயை சுகாதாரத்துறை ஒதுக்கியுள்ளது. ரத்தத்தின் வெப்பநிலையை கைகளால் பார்த்து அளவிட்டு வரும் நிலையை மாற்றி வரும் காலங்களில் Temperature maintainence equipment என்கிற புதிய கருவி மூலம் வெப்பநிலையை அளவிட முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ரத்தத்தின் வெப்பநிலையை துல்லியமாக அளவிடுவதுடன், வீணாகாமல் பாதுகாக்க முடியும் என்று சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
Discussion about this post