ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு கடந்த 23 நாட்களில் ரயில்கள் மூலம் சுமார் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டுள்ளது.
சென்னையில் ஏற்பட்டுள்ள குடிநீர் பற்றாக்குறையை போக்க, வேலூர் மாவட்டம் ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு, தினசரி 50 லட்சம் லிட்டர் குடிநீரை ரயில் வேகன்கள் மூலம் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. பகலில் ஒரு ரயில் மற்றும் இரவில் ஒரு ரயில் என்ற விகிதத்தில் தண்ணீர் கொண்டுவரப்படுகிறது.
இந்நிலையில் கடந்த மாதம் 12 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்ட இந்த திட்டம் மூலம் தினசரி ஜோலார்பேட்டையில் இருந்து சென்னைக்கு தண்ணீர் கொண்டுவரப்பட்டு வருகிறது. இதன் மூலம் கடந்த 23 நாட்களில் சுமார் 85 மில்லியன் லிட்டர் தண்ணீர் கொண்டு வரப்பட்டு, முறையாக சுத்தம் செய்யப்பட்டு, குடிநீர் தட்டுப்பாடு உள்ள பகுதிகளுக்கு வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.