84 ரூபாயை தாண்டியது ஒரு லிட்டர் பெட்ரோல்!

தினந்தோறும் அதிகரித்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வு, வாகன ஓட்டிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தி வருகிறது. கச்சா எண்ணெய் விலை உயர்வை காரணமாக காட்டி, பெட்ரோலிய பொருட்களின் விலை நாள் தோறும் உயர்த்தப்பட்டு வருகின்றன. அதன்படி, பெட்ரோல் விலை 14 காசுகளும், டீசல் விலை 15 காசுகளும் உயர்த்தப்பட்டுள்ளன. சென்னையில் ஒரு லிட்டர் பெட்ரோல் 84 ரூபாய் 5 காசுகளுக்கும், டீசல் 77 ரூபாய் 13 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. தினந்தோறும் உயர்த்தப்பட்டு வரும் விலையால், வாகன ஓட்டிகள் கடும் அவதிக்கு ஆளாகி வருகின்றனர்.

Exit mobile version