தோனி தலைமையிலான இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011 ஆம் ஆண்டு உலக கோப்பையை வென்று 9 ஆண்டுகள் ஆகியுள்ள நிலையில், முன்னாள் மற்றும் இன்னாள் வீரர்கள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இந்திய கிரிக்கெட் அணி முதன் முதலாக 1983 ஆண்டு கபில்தேவ் தலைமையில் உலக கோப்பையை கைற்றி சாதனை படைத்தது. அதன் பிறகு தோனி தலைமையிலான இந்திய அணி, 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் 2 ஆம் தேதி, மும்பை வான்கடே மைதானத்தில் நடந்த உலகக் கோப்பை இறுதி போட்டியில், இலங்கை அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி, கோப்பையை கைப்பற்றியது. இதன்மூலம் 28 ஆண்டு கால கிரிகெட் ரசிகர்களின் கனவை தோனி தலைமையிலான இந்திய அணி நனவாக்கியது.
Discussion about this post