அட்சய பாத்திரம் வைத்திருந்தால் புதையலை கண்டுபிடிக்கலாம் என்று 2 கோடி ருபாய் மோசடி செய்த கும்பலை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
சித்தூர் காவல் நிலையத்தில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 11ம் தேதி திருப்பத்தூரை சேர்ந்த நவீன் குமார் என்பவர் அட்சய பாத்திரம் எனக்கூறி தன்னிடம் 2 கோடியே 10 லட்சத்தை சிலர் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்தார். இந்த புகாரை பெற்றுக்கொண்ட காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்நிலையில் இன்று நேற்று காலை 11 மணி அளவில் குடிப்பள்ளி ரயில் நிலையம் அருகே காவலர்கள் வாகன சோதனையில் ஈடுபட்ட போது இரண்டு கார் மற்றும் பைக்கை காவலர்கள் தடுத்து நிறுத்தினர்.காவலர்களை கண்டதும் காரில் வந்தவர்கள் காரை நிறுத்தி விட்டு தப்பி ஓடினர். தப்பியோடியவர்களை மடக்கி பிடித்தது விசாரணை நடத்தியதில் இவர்கள் அட்சய பாத்திரம் என்று கூறி மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என்பது தெரியவந்தது.
பிடிபட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளிவந்தன அதில் திருப்பத்தூரை சேர்ந்த நவீன்குமார் என்பவரிடம் அட்சயபாத்திரம் நீங்கள் வைத்திருந்தால் புதையல் உங்களுக்கு கிடைக்கும் என்று கூறியுள்ளனர் இதை நம்பிய நவீன் அவர்களிடம் 2 கோடியே 10 லட்சம் வழங்கியுள்ளார். பணத்தை பெற்றுக்கொண்ட மோசடி பேர்வழிகள் நவீன்குமாரிடம் ஒரு டம்மி பாக்ஸை தயார் செய்து அதில் பேட்டரியால் செய்யப்பட்ட மின்விளக்குகளை அமைத்து இது தான் அட்சயபாத்திரம் என்று ஏமாற்றியுள்ளனர். ஆனால் இவர்கள் வழங்கிய அட்சய பாத்திரம் புதையலை தேடித் தரவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த பிறகுதான் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
பிடிபட்டவர்களில் கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை பகுதியை சேர்ந்த மகாதேவா, கங்காதர், கிருஷ்ணகிரியைச் சேர்ந்த ராமச்சந்திரா , கர்நாடக மாநிலம் பங்காருபேட்டை அடுத்த காம சமுத்திரம் கிராமத்தை சேர்ந்த சிவகுமார், சித்தூர் மாவட்டம் கொத்தபள்ளி கிராமத்தை சேர்ந்த சீனப்பா , கர்நாடக மாநிலம் பெங்களூர் மாரியம்மன் தெரு தனசேகர் , காஞ்சிபுரம் மாவட்டம் ராஜகுளம் கிராமத்தை சேர்ந்த விநாயகம், கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி கிராமத்தை சேர்ந்த சேகர் ஆகிய 8 பேரை காவல்துறையின் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
ஆகையால் 3 தனிப்படை அமைத்து போலீசார் வேலூர் பகுதியில் தலைமறைவாக இருப்பவரை தேடிவருகின்றனர். இதையடுத்து தங்க புதையல் இருப்பதாக ஏமாற்றுபவர்களை யாரும் நம்ப வேண்டாம் என டிஎஸ்பி ஹரி ஃபுல்லா பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
Discussion about this post