டெல்லியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவருக்கு 7.4 கிலோ உள்ள ராட்சச கிட்னியை அகற்றி மருத்துவர்கள் சாதனை படைத்துள்ளனர்.
இயற்கையாக மனிதனின் உடலில் சிறுநீரகமானது 12 cm நீளத்திலும், 120 முதல் 150 கிராம் வரை இருக்கும்.இந்த சிறுநீரகம் யூரியா போன்ற கழிவுப் பொருட்களை ரத்தத்திலிருந்து பிரித்து நீருடன் சேர்த்து வெளியேற்ற உதவும் ஒரு உடல் உறுப்பாகும்.
ஆனால் டெல்லியை சேர்ந்த 56 வயதுடைய ஒருவருக்கு 7.4 கிலோவில் சிறுநீரகம் இருந்துள்ளது.இதனை பரிசோதித்த மருத்துவர்கள் உடனடியாக இந்த ராட்சச சிறுநீரகத்தை அகற்றி உள்ளனர்.
இதற்கு முன்பு அமெரிக்காவில் 9 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தை அகற்றியது தான் கின்னஸ் புத்தகத்தில் இடம் பெற்றிருந்தது.மேலும் துபாயில் 4 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தையும், நெதர்லாந்தில் 8 கிலோ எடையுள்ள சிறுநீரகத்தையும் மருத்துவர்கள் அகற்றியுள்ளனர்.
ஆனால் தற்போது இந்தியாவை சேர்ந்த ஒரு நபருக்கு இத்தனை எடையுள்ள சிறுநீரகத்தை அகற்றுவது இதுவே முதல் முறையாகும் .
Discussion about this post