2018 – 19ஆம் ஆண்டில் மட்டும் கொத்தடிமைகளாக இருந்த 791 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தொழிலாளர் நலத்துறை அமைச்சர் நிலோபிர் கபில் தெரிவித்துள்ளார்.
கொத்தடிமை தொழிலாளர்கள் ஒழிப்பு முறை சட்டம் குறித்த பயிலரங்கம் சென்னையில் நடைபெற்றது. இதில், கலந்து கொண்ட பிறகு செய்தியாளர்களை சந்தித்த தொழிலாளர்கள் நலத்துறை அமைச்சர் நிலோபிர் கபில், 2018ஆம் ஆண்டிலிருந்து தற்போது வரை கொத்தடிமைகளாக இருந்த 791 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மீட்கப்பட்ட தொழிலாளர்களுக்கு 1 கோடியே 21 லட்ச ரூபாய் நிவாரணத் தொகை வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் கூறினார். இந்த நிகழ்ச்சியில், தொழிலாளர் நலத்துறை முதன்மை செயலாளர், திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர், துறை அதிகாரிகள் மற்றும் காவல்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.
Discussion about this post