காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை அதிகரித்ததால், மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 7,890 கனஅடியாக உயர்ந்துள்ளது.
கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்திற்கு திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளது. இதேபோல், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், 6 , 205 கனஅடியாக இருந்த நீர்வரத்து இன்று காலை நிலவரப்படி, 7 ,890 கனஅடியாக அதிகரித்துள்ளது. அணையின் நீர்மட்டம் 120 அடியில் இருந்து 119. 5 அடியாக குறைந்துள்ளது. நீர் இருப்பு 92 . 67 டி.எம்.சியாகவும் உள்ளது. அணையில் இருந்து டெல்டா பசனத்திற்காக 16 ,000 கனஅடி நீரும், கிழக்கு, மேற்கு கால்வாய் பாசனத்திற்காக 900 கன அடி நீரும் வெளியேற்றப்படுகிறது.
கர்நாடக அணைகளில் இருந்து திறக்கப்படும் நீரின் அளவு அதிகரித்துள்ளதால், தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து 8 , 200 கனஅடியாக அதிகரித்துள்ளது. ஒகேனக்கல்லில் ஏற்பட்ட வெள்ளெப்பெருக்கால், அருவியில் அமைக்கப்பட்ட இரும்புத் தடுப்பு வேலிகள் முற்றிலும் சேதமடைந்துள்ளன. இதனால் அருவியில் குளிக்க சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை 93வது நாளாக நீடிக்கிறது.
Discussion about this post