தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து திருவாரூர் மாவட்டத்தில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக ரவுடி பட்டியலில் இருந்த 78 பேரை போலீசார் கைது செய்தனர்.
மக்களவைத் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை அடுத்து தேர்தல் விதிமுறைகள் நடைமுறைக்கு வந்தது. திருவாரூர் மாவட்டத்தில் 24 சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டு 24 மணி நேரமும் சுழற்சி முறையில் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். திருவாரூர் அருகே உள்ள கானூர் சோதனைச்சாவடியை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் துரை ஆய்வு செய்தார்.சோதனைச் சாவடியில் 180 காவலர்கள் சோதனையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இந்தநிலையில்,முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திருவாரூர் மாவட்டத்தில் ரவுடி பட்டியலில் உள்ள 78 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு செல்லப்படும் பணம் பறிமுதல் செய்யப்பட்டு விசாரனைக்கு பின் திருவாரூர் வருவாய் கோட்டாட்சியரிடம் ஒப்படைக்கப்படும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
Discussion about this post