இடைத்தேர்தல் நடைபெற்ற 4 சட்டப்பேரவை தொகுதிகளில் சராசரியாக 77.62% வாக்குகள் பதிவாகி உள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர் ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது
ஓட்டப்பிடாரம் தொகுதியில் 72.61% வாக்குகளும், சூலூர் தொகுதியில் 79.41% வாக்குகளும் பதிவாகியுள்ளது. இதேபோல திருப்பரங்குன்றம் தொகுதியில் 74.17% வாக்குகளும், அரவக்குறிச்சியில் 84.28% வாக்குகளும் பதிவாகியுள்ளன. நான்கு தொகுதிகளிலும் சராசரியாக 77.62 % வாக்குகள் பதிவானதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாஹூ தெரிவித்துள்ளார்.
Discussion about this post