சூரிய உதயமாகும் நாடு என்றழைக்கப்படும் ஜப்பான் நாட்டில் எல்லா நாளையும் போல் தான் அன்றைய பொழுது விடிந்தது. அது வரலாற்றின் பெரும் சோக நாளாக அமையும் என்று யாரும் எதிர்பார்த்து இருக்கமாட்டார்கள். 74 ஆண்டுகளுக்கு முன் இதே தினத்தில் அமெரிக்கா, ஜப்பான் நாட்டின் ஹிரோஷிமா நகரின் மீது அணுகுண்டு வீசியது.
இந்த துயர சம்பவத்தின் வடு ஆருவதற்குள் இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு நகரமான நாகசாகியில் சக்திவாய்ந்த குண்டினை அமெரிக்கா வீசியது இதனால் நாகசாகியும் சுடுகாடனது.
அறிவியல் வளர்ச்சியில் உச்சத்தை தொட்ட நாடுகள். மனிதன் மனிதனை கொத்து கொத்தாய் கொன்றது. குறிப்பாக, இரண்டாம் உலக போரில்தான். ஏறத்தாழ பல லட்சம் உயிர்களை பறித்த கொடுரமும் சென்ற நூற்றாண்டில் தான் அரங்கேறியது.
இரண்டாம் உலகப் போரின் காரணமாக ஜப்பான், அமெரிக்காவின் துறைமுகத்தைத் தாக்க அதற்கு பதிலடி கொடுக்க முடிவு செய்தது அமெரிக்கா. அதற்காக ஜப்பான் மீது குண்டு வீசுவதற்கான இறுதி உத்தரவு ஆகஸ்ட் 2-ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. ஹிரோஷிமா, கோகுரா, நாகசாகி மூன்று நகரங்களும் இறுதி இலக்குகளாக முடிவு செய்யப்பட்டு ஆகஸ்ட் 6-ம் தேதி அதிகாலை 1.45 மணிக்கு அணுகுண்டைச் சுமந்துகொண்டு ‘எனோலா கே’ என்ற பி-29 ரக விமானம் புறப்பட்டது. ‘லிட்டில் பாய்’ என்ற அந்த குண்டு, இன்று வரை உலகம் பார்த்த மிக மோசமான பேரழிவை ஹிரோஷிமா மீது கட்டவிழ்த்தது. இத்தாக்குதல் பல லட்சக்கணக்கான மக்களைக் கொன்று குவித்து. சுமார் 5 மைல் சுற்றளவில் ஹிரோஷிமா பகுதியின் 60 சதவிகிதம் தரை மட்டமானது.
இந்த துயர சம்பவத்தின் வடு ஆருவதற்குள் இரண்டு நாட்கள் கழித்து மற்றொரு நகரமான நாகசாகியில் அமெரிக்காவின் குண்டு வீசும் விமானம் பி29- ல் இருந்து சக்திவாய்ந்த குண்டினை வீசியது. இதனால் நாகசாகியும் நாசமானது. சுமார் 500 மீட்டர் உயரத்திலிருந்து வீசிய அணுகுண்டின் காரணமாக ஏறக் குறைய 70,000 மக்கள் மாண்டனர்.
1939ல் ஆரம்பித்த உலகப் போர் 1945ல் ஜப்பான் சரணடைந்தவுடன் முடிவுக்கு வந்தது. இதுவரை உலக வரலாற்றில் மனித குலத்திற்கு எதிராக நடத்தப்பட்ட போர்களில் இதுவே மோசமானது என்கிறது ஆய்வறிக்கைகள்.
குண்டுவெடிப்பு நிகழ்ந்து, 74 ஆண்டுகள் கழிந்துவிட்டன. பேரழிவின் சுவடுகள்கூட மறைந்துவிட்டன. எனினும் அழிவின் வரலாற்றுக்குச் சாட்சியாக நிற்கின்றன ஹிரோஷிமாவும், நாகசாகியும். சர்வநாசத்துக்குப் பிறகு ஃபீனிக்ஸ் பறவைபோல மீண்டு எழுந்து, இன்று உலகிற்கே உதாரணமாக இருக்கிறது ஜப்பான்.