ஆந்திர மாநிலம் குண்டூரில் 74 வயது மூதாட்டி இரட்டை பெண் குழந்தைகளை பெற்றெடுத்து சாதனை படைத்துள்ளார்.
ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில் உள்ள நிலப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜாராம் மங்கயம்மா தம்பதியினருக்கு கடந்த 1962 ஆண்டு மார்ச் மாதம் திருமணம் நடைபெற்றது. இவர்களுக்கு கடந்த 57 ஆண்டுகளாக குழந்தை இல்லாததால் மிகுந்த மனவருத்ததிற்கு ஆளாகியுள்ளனர்.
இந்நிலையில், 50 வயதான பெண்மணி ஒருவர் செயற்கை கருத்தரிப்பு மூலம் குழந்தை பெற்ற செய்தி மங்கயம்மாவுக்கு தெரியவந்துள்ளது. தங்களின் நீண்டநாள் வேதனைக்கு தற்போது தீர்வு கிடைத்துள்ளதாக எண்ணிய மங்கயம்மா தானும் செயற்கை முறையில் கருத்தரித்து குழந்தை பெற்றுக்கொளவது என்று முடிவு செய்துள்ளார். இதற்காக சென்னை ஹைதராபாத் போன்ற நகரங்களில் உள்ள குழந்தைகள் நல மருத்துவர்களிடம் சிறப்பு சிகிச்சை பெற்று வந்துள்ளார்.
அதில் எந்த பயனும் கிடைக்காத நிலையில் கடைசியில் குண்டூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனை மருத்துவர்களின் ஆலோசனைப்படி மங்கயம்மாவுக்கு ஐ.வி.எஃப் எனப்படும் சோதனை குழாய் மூலம் செயற்கை கருத்தரித்தல் செய்யப்பட்டுள்ளது.
மங்கயம்மாவை அந்த மருத்துவமனையிலேயே கடந்த ஒன்பது மாதங்களாக தங்கவைத்து சிகிச்சையளிக்கப்பட்டு வந்த நிலையில். இன்று காலை அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக இரட்டை பெண் குழந்தை பிறந்துள்ளது.
மங்கையம்மாவும் அவரது இரட்டைக் குழந்தைகளும் நலமாக உள்ளதாக தெரிவித்த மருத்துவர்கள், அதிக வயதில் குழந்தை பெற்ற முதல் பெண்மணி என்ற சாதனையையும் அவர் படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.
Discussion about this post