72 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் – அமைச்சர் ஜெயக்குமார்

சரக்கு மற்றும் சேவை வரி கூட்டம் மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி தலைமையில் நடைபெற்றது. காணொலி காட்சி மூலம் நடைபெற்ற இந்தக் கூட்டத்தில், சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கலந்து கொண்டார்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 400க்கும் மேற்பட்ட பொருட்கள் மீதான வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி இருப்பதாக தெரிவித்தார்.

72 பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என்று தமிழக அரசு கோரிக்கை விடுத்து இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பெட்ரோல், டீசல் விலையை ஜிஸ்டிக்குள் கொண்டு வர வேண்டும் என்று எந்த மாநிலமும் கோரிக்கை விடுக்கவில்லை என்றும் ஜெயக்குமார் தெரிவித்தார்

Exit mobile version