உ.பி.யில் சட்டவிரோதமாக இயங்கி வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல்

உத்தர பிரதேசத்தில் சட்ட விரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத உற்பத்தி மையத்திலிருந்து 71 நாட்டு துப்பாக்கிகள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தர பிரதேசம் மாநிலம் எடாஹ் நகரில் சட்டவிரோதமாக ஆயுதங்கள் தயாரிக்கப்படுவதாக காவல்துறையின் சிறப்பு பிரிவுக்கு தகவல் கிடைத்துள்ளது. இதனையடுத்து அங்கு விரைந்து சென்ற அதிகாரிகள், சட்டவிரோதமாக செயல்பட்டு வந்த ஆயுத உற்பத்தி மையத்தில் சோதனை நடத்தினர்.

அப்போது அங்கு தயாரிக்கப்பட்ட 71 நாட்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததுடன் ஜர்னல் சிங் என்பவரையும் கைது செய்துள்ளனர். அவர் மீது ஏற்கனவே பல்வேறு வழக்குகள் நிலுவையில் இருப்பது தெரியவந்துள்ளது. மேலும் சட்டவிரோத ஆயுதங்கள் தயாரிப்பில் தொடர்புடையவர்கள் குறித்தும் ஜர்னல் சிங்கிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Exit mobile version