70வது குடியரசு தினத்தை முன்னிட்டு மாநிலங்களில் ஆளுநர்கள் தேசியக் கொடியை ஏற்றி அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
ஆந்திர பிரதேசத்தில் ஆளுநர் நரசிம்மன், தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
கேரள மாநில ஆளுநர் பி.சதாசிவம், திருவனந்தபுரத்தில் தேசிய கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். பின்னர் இராணுவ அணுவகுப்பு மாரியாதையை ஏற்றுக் கொண்டார்.
கோவாவில் ஆளுநர் மிருதுலா சின்ஹா, தேசிய கொடியை ஏற்றி வைத்து, முப்படை வீரர்களின் அணிவகுப்பு மரியாதையை பார்வையிட்டார்.
மத்திய பிரதேசத்தில் ஆளுநர் ஆனந்தி பென் படேல் திறந்த வாகனத்தில் சென்று முப்படை வீரர்களின் ராணுவ அணுவகுப்பு மரியாதையை ஏற்றார்.
ஒடிசாவில் ஆளுநர் கணேசி லால் தேசிய கொடியை ஏற்றி வைத்து ராணுவ மரியாதையை ஏற்றுக் கொண்டார்.
Discussion about this post