ஐ.என்.எஸ் ஜலஷ்வா போர்க்கப்பல் மூலம் மாலத்தீவில் இருந்து மீட்கப்பட்ட 700 இந்தியர்கள் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்தனர்.
வெளி நாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சமுத்திரசேது என்ற திட்டத்தின் மூலம் இந்திய கடற்கடைக்கு சொந்தமான ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல் மூலம் கடந்த இரண்டு கட்டங்களாக மாலத்தீவு மற்றும் இலங்கையில் இருந்து ஏராளமான இந்தியர்கள் தாய்நாடு அழைத்து வரப்பட்டனர். தற்போது மாலத்தீவில் இருந்து 700 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டனர். ஐ.என்.எஸ் ஜலஷ்வா கப்பல் மூலம் தூத்துக்குடி துறைமுகம் வந்தடைந்த அனைவருக்கும் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதையடுத்து, சிறப்பு பேருந்துகளில் அவர்களின் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஜலஷ்வா போர்க்கப்பல் மூலம் இதுவரை சுமார் 2 ஆயிரத்து 700க்கும் மேற்பட்ட இந்தியர்கள் மீட்கப்பட்டுள்ளனர்.
Discussion about this post