இந்திய பணத்திற்கு பதிலாக பல மடங்கு வெளிநாட்டு பணம் தருவதாக கூறி மோசடி செய்த 7 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.
திருவள்ளூர் மாவட்டம் நந்தியம்பாக்கத்தை சேர்ந்த பர்வேஷ் என்பவர் செல்போன் கடை வைத்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன் இவரது கடைக்கு வந்த வடமாநிலத்தை சேர்ந்த ஒருவர் தன்னிடம் 27 லட்ச ரூபாய் மதிப்பிலான ரியால் உள்ளதாகவும், அதனை மாற்ற முடியாமல் சிரமப்படுவதாக கூறியுள்ளார். 3 லட்சம் ரூபாய் தந்தால், மொத்த ரியாலையும் தருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
இதனை நம்பி பணத்தை கொடுத்து, பேப்பரில் மடித்து கொடுக்கப்பட்ட ரீயாலுடன் பர்வேஷ் வீட்டிற்கு வந்து அதைப் பிரித்து பார்த்த போது, ஒவ்வொரு கட்டின் உள்ளேயும் காகிதங்களை வைத்து ஏமாற்றியது தெரியவந்தது. இது தொடர்பாக பர்வேஷ் காவல் துறையினரிடம் புகார் அளித்தார். சிசிடிவி காட்சி உதவியுடன் விசாரணையில் ஈடுபட்ட காவல்துறையினர், 7 பேரை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.
Discussion about this post