இலங்கைக்கு சென்ற மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்த 7 பேர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இலங்கையில் 8 இடங்களில் நேற்று நிகழ்ந்த குண்டுவெடிப்பு தாக்குதலில் 290க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 500க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர். இந்நிலையில், கர்நாடகவைச் சேர்ந்த மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி நிர்வாகிகள் 7 பேர் தாக்குதலில் பாதிக்கப்பட்டுள்ள கர்நாடக முதல்வர் குமாரசாமி தெரிவித்துள்ளார். தாக்குதலுக்கு பின் இவர்களை தொடர்புகொள்ள முடியவில்லை என்றும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில், தாக்குதலில் பலியான ஹனிமந்தரப்பா மற்றும் ரங்கப்பா ஆகியோர் மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்றும் கூறப்படுகிறது
Discussion about this post