12 மாநிலங்களில் நடைபெற்ற இரண்டாம் கட்ட தேர்தலில் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
கடந்த 11 ஆம் தேதி 91 தொகுதிகளுக்கு முதல் கட்ட நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டமாக 12 மாநிலங்களில் உள்ள 95 நாடாளுமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. தமிழகத்தில் 38 நாடாளுமன்ற தொகுதிகளுக்கும், 18 சட்டமன்ற தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடைபெற்றன.
புதுச்சேரியில் ஒரு நாடாளுமன்ற தொகுதிக்கும், காலியாக உள்ள தட்டாஞ்சாவடி சட்டமன்ற தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது.
இதேபோல் கர்நாடகாவில் 14 தொகுதிகளுக்கும், மகாராஷ்டிராவில் 10 தொகுதிகளுக்கும், உத்தர பிரதேசத்தில் 8 தொகுதிகளுக்கும், பீகார்-அசாம் மற்றும் ஒடிசாவில் தலா 5 தொகுதிக்கும், சத்தீஷ்கரில் 3 தொகுதிக்கும், காஷ்மீரில் 2 தொகுதிக்கும், மணிப்பூரில் 1 தொகுதிக்கும் தேர்தல் நடைபெற்றது. காலை முதலே மக்கள் ஆர்வத்துடன் தங்கள் வாக்குகளை பதிவு செய்தனர்.
இரண்டாம் கட்டமாக நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் சுமார் 66 சதவிகித வாக்குகள் பதிவாகியுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
Discussion about this post