தமிழகத்தில் புதிதாக 646 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அறிவித்துள்ளது
புதிதாக 646 பேருக்கு தொற்று ஏற்பட்டுள்ளதால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்து 728 ஆக அதிகரித்துள்ளது. இதில் தமிழகத்தை சேர்ந்த 592 பேருக்கும், வெளிமாநிலங்கள் மற்றும் வெளிநாடுகளிலிருந்து தமிழகம் வந்த 54 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.புதிதாக பாதிக்கப்பட்டவர்களில் 386 பேர் ஆண்கள் மற்றும் 260 பேர் பெண்கள் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது
சென்னை மாவட்டத்தில் அதிகபட்சமாக 510 பேருக்கு கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக திருவள்ளூரில் 25 பேருக்கும், செங்கல்பட்டில் 23 பேருக்கும், திருவண்ணாலையில் 14 பேருக்கும், காஞ்சிபுரத்தில் 13 பேருக்கும் கொரோனா தொற்று உறுதிபடுத்தப்பட்டுள்ளது.
கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தவர்களில், நேற்று ஒரே நாளில் 611 பேர் முழுமையாக குணமடைந்து வீடு திரும்பினர். பாதிப்பிலிருந்து மீண்டவர்களின் மொத்த எண்ணிக்கை, 9 ஆயிரத்து 342 ஆகவும் குணமடைந்தவர்களின் சதவீதம் 52 புள்ளி 7 ஆகவும் அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் நேற்று 9 பேர் உயிரிழந்ததால், பலி எண்ணிக்கை 127 ஆக அதிகரித்துள்ளது. கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு 8 ஆயிரத்து 256 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
Discussion about this post