குடியுரிமை திருத்த சட்டத்துக்கு நாடு முழுவதிலும் இருந்து, 62 சதவீத மக்கள் ஆதரவு தெரிவித்து இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
மத்திய அரசின் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன. மேலும் இந்த சட்டத்தை திரும்ப பெறக்கோரி எதிர்க்கட்சிகள், மாணவர்கள் மற்றும் பல்வேறு அமைப்புகள் போராட்டம் நடத்தி வருகின்றன. இந்த நிலையில் குடியுரிமை திருத்த சட்டம் தொடர்பாக நாடு முழுவதும் மக்களிடையே கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. பல்வேறு தரப்பினரிடையே நடத்தப்பட்ட இந்த கருத்து கணிப்பில், 62 சதவீத மக்கள் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்துள்ளதாகவும், 37 சதவீத மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
Discussion about this post