தமிழ்நாட்டில் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளதாக தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் 6,10,44,358 வாக்காளர்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் 3,01,12,370 பேரும், பெண் வாக்காளர்கள் 3,09,25,603 பேரும், மூன்றாம் பாலினத்தவர்கள் 6,385 பேரும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. தமிழகத்தில் அதிக வாக்காளர்களை கொண்ட தொகுதியாக சோழிங்கநல்லூரும், குறைவான வாக்காளர்களை கொண்ட தொகுதியாக கீழ்வேளூரும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சோழிங்கநல்லூர் தொகுதியில் 6,55,366 வாக்காளர்களும், கீழ்வேளூரில் 1,73,107 வாக்காளர்களும் உள்ளதாக கூறப்பட்டுள்ளது. அதிக அளவாக கோவை மாவட்டத்தில் 15,165 புதிய வாக்காளர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாகவும், குறைந்த அளவாக அரியலூர் மாவட்டத்தில் 1,022 புதிய வாக்காளர்களும் சேர்க்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, நீக்கம் உள்ளிட்டவைகளை மேற்கொள்ள நவம்பர் 21, 22 மற்றும் டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படும் என்று சத்யபிரதா சாகு குறிப்பிட்டுள்ளார்.
விண்ணப்பங்கள் ஜனவரி 5 ஆம் தேதி இறுதி செய்யப்பட்டு ஜனவரி 20 ஆம் தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Discussion about this post