610 அரசியல் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை

மக்களவைத் தேர்தலில் 610 அரசியல் கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை என்பது தேர்தல் ஆணைய தகவல்கள் மூலம் தெரியவந்துள்ளது.

நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் 303 தொகுதிகளில் பாஜக வெற்றி பெற்றது. இந்த தேர்தலில், 610 கட்சிகள் ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. இவற்றில் 80 கட்சிகள் ஒரு சதவீதம் அல்லது அதற்கு குறைந்த வாக்கு சதவீதத்தை மட்டுமே பெற்றுள்ளன. மீதமுள்ள 530 கட்சிகள் ஒரு சதவீத வாக்குகளைக் கூட பெறவில்லை என்பது தேர்தல் ஆணையத்தின் இணைய தகவல் மூலம் தெரியவந்துள்ளது.

Exit mobile version